உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வந்தான் சின்ன கண்ணன்...

வந்தான் சின்ன கண்ணன்...

குழந்தை கிருஷ்ணனைக் கம்சனிடம் இருந்து காப்பாற்றும் விதத்தில், வசுதேவர்  ஆயர்பாடியில் வசிக்கும் நந்தகோபரின் வீட்டில் விட்டார். ஆயர்பாடி மக்கள் கிருஷ்ணரின் வருகையை கேள்விப்பட்டு வாத்தியம் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தணர்கள் யாகம் வளர்த்து வேத மந்திரங்களை ஓதினர்.  பசுக்கொட்டில், வீதிகளில் மாக்கோலம், மஞ்சள் மற்றும் செஞ்சூரணத்தால் கோலம் இட்டு அழகுபடுத்தினர். வாசனை  திரவியம் பூசியும் ஒருவருக்குஒருவர் பன்னீர் தெளித்தும் மகிழ்ந்தனர்.  லட்சுமியின் அம்சமான பசுக்களுக்கு பூக்கள் சூட்டியதோடு  வீடெங்கும் மலர் தோரணத்தால் அலங்கரித்தனர்.  காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகை, வளையல்களை அணிந்து கிருஷ்ணரைக் காண விரைந்தனர். நந்தகோபரின் அரண்மனையில் கூடி  நின்று  “வாசுதேவகிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! நீயே எங்களைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். நந்தகோபரும் யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்கள் என அந்தணர்களுக்கு தானம் அளித்து பாலகனின் வரவை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !