‘தினமலர்’ செய்தி எதிரொலி காஞ்சிபுரம் கோவில் கோபுரத்தில் செடிகள் அகற்றம்
ADDED :3307 days ago
காஞ்சிபுரம்: வரதராஜப்பெருமாள் கோவில் கோபுரத்தில் இருந்த செடிகள் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், மேற்கு ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் அபாயம் உள்ளதாக, கடந்த, 11ம் தேதி, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கோபுரத்தில் இருந்த செடிகள் அகற்றப்பட்டன.