உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ஆடி கார்த்திகை விழாவில் பக்தர்களின் மலர்க்காவடி

பழநி ஆடி கார்த்திகை விழாவில் பக்தர்களின் மலர்க்காவடி

பழநி, ஆடி கார்த்திகையை முன்னிட்டு, பழநி மலைக் கோயிலில் பக்தர்கள் மலர்காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆடி கார்த்திகையை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் மதியம் 12:00 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி, சனி பகவான், தட்சணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்கவசம் சாத்தி தீபாராதனையும், மலைக்கோயிலில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேக, சிறப்புபூஜைகள் நடந்தன. ஆன்மிக பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் மலர்க் காவடிகள், பால் குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !