உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுகடம்பூர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா

சிறுகடம்பூர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.  இதை முன்னிட்டு முதல் நாள் காலை காலை கருட கொடியேற்றமும், ராதா, ருக்மணி, கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். மாலை 6:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மறுநாள் காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தொடர்ந்து சாமி வீதியுலாவும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறுதல், உறியடி விழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !