கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா
ADDED :2971 days ago
விழுப்புரம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, விழுப்புரத்தில் உறியடி விழா நடந்தது. விழுப்புரம் வி.மருதுார், பஜனை கோவில் தெருவிலுள்ள வேணுகோபால் சுவாமிக்கு, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கடந்த ௧௪ம் தேதி காலை நடந்தது. அதனை தொடர்ந்து, சுவாமி வீதியுலா மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் தலைமை தாங்கி, உறியடி போட்டியை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராசு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் தனுசு, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஆலய நிர்வாகிகள் மோகன், ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.