உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

சிவபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

ப.வேலூர்: கபிலர்மலை, சிவபுரம் கோவிலில், சிவபுரீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மை, விநாயகர், முருகன், ஸ்வர்ண ஆகார்ஷன பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு, நேற்று அதிகாலை, கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மாலை, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து, அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலை, இரண்டாம் கால பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை முடித்து, கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, ராகு கேது பெயர்ச்சி பரிகார யாக வேள்வி துவங்கி, இன்று முடிகிறது. நாளை மாலை, சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !