உலக அமைதி வேள்வி
ADDED :2973 days ago
ராஜபாளையம், உலக சமுதாய சேவா சங்கத்தை தொடங்கிய வேதாத்திரி மகரிஷியின் 107 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மனவளக்கலை மன்றத்தினர் உலக அமைதி வேள்வி தினமாக கொண்டாடினர். இதையொட்டி ராஜபாளையம் மனவளக்கலை மன்றம் சார்பில் வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்னும் வாழ்த்து மந்திரத்தை இடைவிடாது தியானித்தனர். மனவளக்கலை மன்ற பேராசிரியர் ராஜம்,பொறுப்பாசிரியர் வெங்கட்ராஜா,மகரிஷி பற்றி அருள்நிதிகள் முருகன், தனம் பேசினர். 80 பேருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தர்மலிங்கராஜா, அருணகிரிநாதன், முருகேசன் செய்தனர்.