நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் புதிய தங்கதேர் பிரதிஷ்டாபிஷேகம்
ADDED :3337 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் தங்கதேர் பிரதிஷ்டாபிஷேகம் நடந்தது. உலக நன்மைக்காக மழை பெய்ய வேண்டி சிறப்பு மகா யாகம் நடத்தப்பட்டது. கணபதி ஹோமம், ஜெபம் ஹோமம், கலசங்கள் ஞான உலா மற்றும் தங்கதேர் பிரதிஷ்டாபிஷேகம் நடந்தது. அதன்பின் விநாயகருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நடைபெற்ற தங்கதேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.