ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
ADDED :3084 days ago
காளிப்பட்டி: ஆவணி முதல் ஞாயிறு முன்னிட்டு, காளிப்பட்டி ஆஞ்சநேயர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், நாமக்கல் எல்லையில் உள்ள காளிப்பட்டி சென்றாயபெருமாள் கோவிலில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.