மழை வேண்டி திருவிளக்கு பூஜை
ADDED :2978 days ago
திண்டிவனம்: திண்டிவனம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. திண்டிவனத்திலுள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையை முன்னிட்டு,அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மஞ்சள் காப்பு அலங்கார மும் நடந்தது. தொடர்ந்து, நகரத்தில் அமைதி வேண்டியும், மழை வேண்டியும், மேல் மருவத்துார் ஆதிபராசக்தி மன்றத்தை சேர்ந்த பக்தர்கள் தலைமையில், மகா திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் துணை தலைவர் வேல்முருகன் செய்திருந்தார். நிகழ்ச்சியில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள், காங்., மாவட்ட வர்த்தக தலைவர் தீனதயாளமூர்த்தி, தினகர், கலியமூர்த்தி, ராதாகிருஷ்ணன், அன்னை சந்தானம், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.