விழுப்புரத்தில் பால்குட ஊர்வலம்
ADDED :3084 days ago
விழுப்புரம்: விழுப்புரம் நாவலர் நெடுந்தெருவில் அமைந்துள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 25வது ஆண்டு 108 பால்குட திருவிழா நடந்தது. விழாவை யொட்டி, நேற்று காலை 8.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து 11.00 மணிக்கு பக்தர்கள் 108 பால்குடம் ஏந்தி, பொன்முடி நகர், காலேஜ் நகர் வழியாக நாவலர் நெடுந்தெருவில் உள்ள கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.