சிதம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :3028 days ago
பனமரத்துப்பட்டி: சிவகாமி, சிதம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. பனமரத்துப்பட்டி அருகே, நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், ஜூலை, 16ல் நடந்தது. அதை தொடர்ந்து, தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று, சிவகாமி, சிதம்பரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அதையொட்டி, அதிகாலையில் மூலவருக்கு பால், தயிர், இளநீர், கரும்புசாறு, தேன், பழங்கள் மூலம் அபிஷேகம் செய்து, உற்சவ மூர்த்தி சிலைகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து, மாலை மாற்றுதல், திருக்கல்யாண உற்சவம் நடந்து, தீபாராதனை காட்டப்பட்டது. திருமணக்கோலத்தில், சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.