உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, பில்லிக்கம்பை கிராமத்தில் செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிேஷகம் சிறப்பாக நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணிமுதல், மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, வேத பாராயணம், அஸ்டோத்திரம், யாகபூஜை, திருமுறை விண்ணப்பம், நாடி சந்தானம் பூஜையை அடுத்து, திருவாவடுதுறை சாது, சிவ பாலகுரு மற்றும் கடலுார் சிவஸ்ரீ அகோர மூர்த்தி சிவாச்சாரியார் ஆகியோர், கிராம மக்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்கி, மகா கணபதிக்கு கும்பாபிேஷகத்தை நடத்தினர். தொடர்ந்து, சன்னதி மூல அபிேஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு மற்றும் பிரும்மாதேவா ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, பில்லிக்கம்பை ஊர் தலைவர் சுப்பா கவுடர் தலைமையில், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !