திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு அலங்காரம்
ADDED :3028 days ago
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் வெண்ணெய்த்தாழி கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி திருவதிகை ேஹமாம்புஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் வெண்ணெய்த்தாழி கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவையொட்டி காலை 6:30 மணிக்கு விஸ்வரூபம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை,மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு நடந்தது.