திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம்: பக்தர்கள் வடம்பிடித்து இழுப்பு
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் தேரோட்டம் நேற்று நடந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி - அம்பாள் பல்வேறு சப்பரங்களில் வீதி உலாவந்தனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.காலை 6.15 மணிக்கு விநாயகர் தேர் ரதவீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்துகுமரவிடங்க பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பெரிய தேர் 7.05 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு ரதவீதிகளிலும் அருள்பாலித்து 8.05 மணிக்கு நிலையம் சேர்ந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பரஞ்ஜோதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.