பொன்மொழிகள்
ADDED :3077 days ago
தோழர்களுடன் இனிய தொடர்புகளை பேணி வாருங்கள். யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனே விட்டுக் கொடுத்தாவது சமாதானம் செய்து கொள்ளுங்கள். கள்ளம் கபடங்களை விட்டும் உங்கள் இதயத்தைதூய்மையானதாக்கி கொள்ளுங்கள்.
நீங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும் உங்களுக்கிடையே உள்ள உறவுகளை சீராக்கி கொள்ளுங்கள். எப்பணி நல்லதாக இருக்கிறதோ, அதில் எல்லாருடனும் ஒத்துழையுங்கள். இறைவனையும் அவருடைய தூதரையும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களும், மேலும் ஏதேனுமொரு பொதுப்பணிக்காக அவர்கள் இறைத்தூதருடன் இருக்கும் போது அவரிடம் அனுமதி பெறாமல், அவரை விட்டு பிரிந்து போகாதவர்களுமே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் ஆவர்.