உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அமாவாசை: திருத்தணி கோவிலில் சிறப்பு பூஜை

ஆவணி அமாவாசை: திருத்தணி கோவிலில் சிறப்பு பூஜை

திருத்தணி: ஆவணி, சோமவார அமாவாசையையொட்டி, தணிகாசலம்மன் கோவிலில் அஸ்வத்நாராயண பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், நேற்று, ஆவணி மாதம் சோம வார அமாவாசையையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 4:30 மணி முதல், மதியம், 1:00 ம ணி வரை, மூலவருக்கு அஸ்வத்நாராயண பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் உள்ள அரச மரம் மற்றும் மூலவரை, 108 முறை சுற்றி வந்து வழிபட்டனர்.  மாலையில், மூலவருக்கு வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதே போல், திருத்தணி அடுத்த , மத்துார்ம கிஷாசுரமர்த்தினி அம்மன், திருத்தணி மடம் கிராமம், படவேட்டம்மன், ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் (புறா கோவில்), கீழ்பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன். கன்னிகாபுரம் மேடு மற்றும் காந்தி நகர், ஆகிய பகுதியில் உள்ள, விஷ்ணு துர்க்கையம்மன் ஆகிய கோவில்களில், ஆவணி மாத அமாவாசையையொட்டி, மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !