உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் ராதா கல்யாணம்

பெரியகுளத்தில் ராதா கல்யாணம்

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் காட் இந்தியா டிரஸ்ட் சார்பில், கிருஷ்ண ஜெயந்திவிழா நிகழ்ச்சி 10 நாட்கள் நடந்தது. தினமும் அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம், மதுரகீதம் பஜனை, திருமஞ்சனம், கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக நேற்று மண்டபத்தில் ராதா, கிருஷ்ணர் கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. விஷ்ணுராதா பாகவதர் நடத்தி வைத்தார். குடும்ப சூழ்நிலை, கிரக தோஷங்களால் ஏற்பட்ட திருமணத்தடை நீங்கி மகிழ்வான மணவாழ்க்கைக்கு விசேஷ கூட்டு பிரார்த்தனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள், நாமத்வார் பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !