உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவுடையம்மன் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்

திருவுடையம்மன் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்

மீஞ்சூர் : மண்டல அபிஷேக நிறைவு நாளில், திருவுடையம்மன் கோவிலில், நேற்று, 108 சங்கு அபிஷேகம் சிறப்பாக நடந்தது. மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, ஜூலை மாதம், 5ம் தேதி, குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. மண்டல அபிஷேக நிறைவு நாளான நேற்று, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.மூன்று யாக சாலை அமைத்து, மந்திரங்கள் ஓதப்பட்டன. விநாயகர் பெருமானுக்கு கலச அபிஷேகமும், திருவுடைஅம்மன், திருமணங்கீஸ்வரர் ஆகியோருக்கு, 108 சங்கு அபிஷேகமும் செய்யப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் நடந்தன. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, திருவுடையம்மனையும், திருமணங்கீஸ்வர பெருமானையும் வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !