சப்த கன்னியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் துவக்கம்
ADDED :2998 days ago
திருத்தணி : சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை, கரிகோலம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் கிராமத்தில், சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேக விழா, நாளை மாலை, கரிகோலம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள், மகா கும்பாபிஷேகம், காலை, 6:00 மணி முதல், காலை, 7:00 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.பின், கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.