கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED :2999 days ago
கரூர்: கரூர், சின்னாண்டாங் கோவில் ரோடு, அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவில், 1998ல் கட்டப்பட்டது. இங்கு, பொதுமக்கள் உதவியுடன் பிள்ளையார்பட்டியிலிருந்து அடி மண் எடுத்து வந்து கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு, மூலவர் விநாயகர் மட்டுமின்றி, கன்னி விநாயகர், ஐயப்பன், கிருஷ்ணர், முருகன், தட்சணாமூர்த்தி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 2011ல், இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது. சங்கடஹரா சதுர்த்தி, கிருத்திகை, பவுர்ணமி, சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாப்படுகிறது.