சதுரங்கப்பட்டினத்தில் கோவில் குளம் சீரமைப்பு
ADDED :3080 days ago
சதுரங்கப்பட்டினம் : சதுரங்கப்பட்டினம், வெள்ளீஸ்வரர் கோவில் குளத்தை, இப்பகுதி குழுவினர், துார்வாரி மேம்படுத்துகின்றனர். இந்து சமய அறநிலைய துறையின் கீழ், சதுரங்கப்பட்டினத்தில், வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் அருகில் உள்ள குளம், 40 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியின் நீராதாரமாக விளங்கியது. நீண்ட காலமாக பராமரிக்காததால், துார்ந்திருந்தது. இந்நிலையில், சதுரங்கப்பட்டினம் வளர்ச்சி, சமூக ஆர்வலர் குழுவினர், குளத்தை துார்வாரி மேம்படுத்த முடிவெடுத்தனர். தற்போது, குளக்கரை முட்புதரை அகற்றி, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் துார் வாருகின்றனர்.