கணபதியை கொண்டாடிய முஸ்லிம் வாலாஜாக்கள்
சென்னை:முஸ்லிம் மன்னர்களான வாலாஜாக்கள், இந்துக்களின் தெய்வமான, கணபதிக்கு காசுகளை வெளியிட்டு பெருமைப்படுத்தியது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.கடந்த, 1744 முதல், 1801 வரை, தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்ட, முஸ்லிம்களான வாலாஜாக்கள், தமிழ், தமிழர், அவர்களின் பண்பாடு மீது, அதிக மதிப்பை வைத்திருந்தனர். அதற்கு சான்றாக, அவர்கள் வெளியிட்ட நாணயங்களில், கணபதியின் உருவத்தை பொறித்து வெளியிட்டனர். இதுகுறித்து, நாணய ஆய்வாளர், மன்னர்மன்னன் கூறியதாவது:வாலாஜாக்கள், மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக வாழ்ந்தனர். அவர்கள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, தெப்பகுளம் வெட்டியது உள்ளிட்ட பல ஆன்மிக சேவைகளை செய்துள்ளனர். அவர்கள், கணபதியின் உருவத்தை, அதிக நாணயங்களில் பொறித்து, தமிழ், பெர்சிய மொழிகளில் எழுத்துக்களை பொறித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.