வினை தீர்க்கும் விநாயகனுக்கு விழா
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை நகரில் பல்வேறு இடங்களில், வித்தியாசமான விநாயகர் சிலைகள் நிறுவி, சிறப்பு வழிபாடு நடந்தது. ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி திதியை, விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியான நேற்று, சென்னை முழுவதும், ஏராளமான விநாயகர் சிலை கடைகள் முளைத்திருந்தன. 50 ரூபாய் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை, விநாயகர் சிலைகள் விற்கப்பட்டன. மஞ்சள் கிழங்கு, வாழை கன்று, அருகம்புல், எருக்கம்பூ மாலை, கம்பு, கரும்பு ஆகியவற்றின் விற்பனையும் சூடுபிடித்தது. இனிப்பகங்களில், விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டைக்குவரவேற்பு இருந்தது. சென்னை முழுவதும், ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள், வீதிகளில் வைக்கப்பட்டன. குடியிருப்போர் சங்கம், அமைப்புகள் சார்பில், தெருவிலும், சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. தர்பூசணி, நவதானியம், வாழைப்பழம், கடலை மிட்டாய், காய்கறி என பல ரகங்களில், விநாயகர்சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. அவற்றுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. பிரதான கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, வழிபாட்டிற்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.-நமது நிருபர் -