திண்டுக்கல் ஐயப்ப சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்
ADDED :2998 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் ஐயப்ப சுவாமி கோயில் ஸ்படிக லிங்கம், புஜ பகவதி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலையில் கணபதி ஹோம், பீட பூஜை, கலச பூஜை, ஜீவகலசம், பிரம்ம கலசம், தத்துவ கலசம் பூஜை நடந்தது. அதன் பின், தேவி கும்பாபிஷேகம், மஞ்சள் மாதா கும்பாபிஷேகம், நாகராஜா கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்படிக்க லிங்கம் மற்றும் அஷ்ட புஜ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.