உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதையில் 1008 சங்காபிஷேகம்

வேதையில் 1008 சங்காபிஷேகம்

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இரண்டாவது வார சோமவாரத்தை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்கில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின் சிவனுக்கு 1008 சங்காபிஷகமும், சிறப்பு தீபாரதனையும் நடந்தது. அப்போது வேதாரண்யம் விளக்கழகு என்பதுக்கு ஏற்ப சன்னிதியில் தீபங்கள் ஏற்றபட்டது. வேதாரண்யம் நாகை ரஸ்தா காசி விஸ்வநாதர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், கோடியக்காடு குழகர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !