தீயனூர் கோகுலக்கண்ணன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3000 days ago
ராமநாதபுரம்; போகலுார் ஒன்றியம், தீயனுார் கண்ணபுரம் கிராமத்தில் வேணுகோபாலசாமி, கோகுலக்கண்ணன்,விநாயகர்,முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேஸபலி, யாகசாலை பிரவேஸம், கடஸ்தாபனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஸஹஸ்ர நாம பாராயணம், பூர்ணாகுதி வேதம் ஜெபம் பாராயணம், தீபாராதனை, யந்திர ஸ்தாபனம், மருத்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூபம்,கோபூஜை, தன பூஜை, சூரிய நமஸ்காரம், திவ்ய பிரபந்தம், இரண்டாம் கால பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, காலை 8:30 க்கு மேல் மகாகும்பாபிஷேகம், கும்பத்திற்கு புனித நீர் ஊற்றுதல், நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.