உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலசாமிகள் கோவில் குடமுழக்கு விழா

கோலசாமிகள் கோவில் குடமுழக்கு விழா

வடலுார்: குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே தவத்திரு கோலசாமிகள் கோவில் என அழைக்கப்படும் மீனாட்சியம்மை உடனமர் சொக்கநாதர் கோவில் குடமுழக்கு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி மாலை விநாயகர் வழிபாடு மற்றும் தமிழால் முதல்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம் நடந்தது. 26ம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவப்பட்டு, மூன்றாம் கால வேள்வி நடந்தது.  தொடர்ந்து 27ம் தேதி காலை நான்காம் கால வேள்வியும், 10:00 மணிக்கு வேள்வி சாலையிலிருந்து திருக்குடங்கள் புறப்பட்டு 11:00 மணிக்கு கோபுர விமானங்களுக்கும் தொடர்ந்து சொக்கநாதர் திருக்குட நன்னீராட்டு நடந்தது. விழா ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்டம், தவத்திரு கோலசாமிகள் வழிபாடு மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !