கையில் காப்பு கயிறு கட்டுவதன் பலன் என்ன?
ADDED :2996 days ago
கையில், காப்பு கயிறு கட்ட வேண்டியதன் அவசியத்தை, நம்மில் பலர் உணர்வதேயில்லை; ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும். மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள், நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் கவசமாக செயல்படுகின்றன. பட்டு நூலினால் ஆன காப்பு கயிறுகளை அணிவது, அதிக பலன் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காப்பு கயிறு அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை மற்றும் அருகம்புல் போன்றவற்றில் செய்த காப்பு கயிறு, மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.