பெயர்ச்சியடைந்தார் குரு: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
ADDED :3303 days ago
திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நவக்கிரகங்களில் பூர்ண சுபகிரகமான குரு, வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று (செப்.2) காலை 9:31 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். ஓராண்டு காலம் ஒரு ராசி இவர் சஞ்சரிக்கிறார். இக்குருபெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு பரிகார ஸ்தலம்) கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் குருபகவானுக்கு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருபகவானை தரிசிக்க கோவிலின் உள் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். குருபகவான் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.