பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிந்தனர்
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குருத்தலங்களுல் கிழக்கு முகமாக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலம் என்ற சிறப்பைப் பெற்றது பட்டமங்கலம். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறந்து பக்தர்கள் தரிசனம் துவங்கியது. இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு முகமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆலமரத்தினடியில் அமர்ந்துள்ள உற்சவர், சந்தனக்காப்பில் எழுந்தருளிய மூலவரை பக்தர்கள் வழிப்பட்படனர். காலை 9.31 மணிக்கு குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ந்ததை அடுத்து மூலவருக்கும், ராஜகோபுரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து குருப்பெயர்ச்சி ஹோமத் தீர்த்தம் வழங்கப்பட்டது. பின்னர் குருப்பெயர்ச்சி சிறப்பு அபிசேக,ஆராதனைகள் நடைபெற்றன.