உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபவிழாவில் சிம்மவாகனத்தில் ஸ்வாமி உலா!

திருவண்ணாமலை தீபவிழாவில் சிம்மவாகனத்தில் ஸ்வாமி உலா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மூன்றாம் நாளில் ஸ்வாமி சிம்ம வாகனத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார். தீப விழாவில் இன்று உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்து அருள் பாலிக்கின்றனர். முதல் பிரஹாரத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு எதிரில் ஆயிரத்து 8 சங்காபிஷேகம் செய்து அருணாசலேஸ்வரருக்கு வழிபாடு நடத்தப்படும். பகல் 10 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்திலும், ஸ்ரீசந்திரசேகரர் பூத வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி, தெய்வாணை சமேதரராய் சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேததரராய் அருணாசலேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. வெள்ளி உண்டியல்: அருணாசலேஸ்வரர் கோவில், இன்று (டிச.,1) பக்தர்கள் காணிக்கை செலுத்த வெள்ளி உண்டியல் வைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கார்த்திகை மஹா தீபத்திருவிழா துவங்கியது. ஆண்டுதோறும் மூன்றாம் திருவிழா நாளில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் முன் பக்தர்கள் காணிக்கை செலுத்த வெள்ளி உண்டியல் வைக்கப்படும்.உண்டியல் வைக்கும் முன் ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து உண்டியல் காணிக்கை செலுத்த செய்வர். உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இரண்டாம் நாள் விழா: தீபத்திருவிழா இரண்டாம் நாள் விழாவான நேற்று பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். வெள்ளி இந்திர விமானத்தில் ஸ்வாமியும், விநாயகர் முஷிக வாகனத்திலும், ஸ்ரீசந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் வீதி உலா வந்தார். இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வாணை சமேதரராய் முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் வெள்ளி இந்திர விமானத்திலும், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !