சபரிமலையில் 10ம் தேதி 2 மணி நேரம் அடைப்பு!
ADDED :5159 days ago
சபரிமலை: சந்திரகிரகணத்தையொட்டி சபரிமலையில், வரும் பத்தாம் தேதி வழக்கமாக நடை திறக்கும் நேரத்தில், இரண்டு மணி நேரம் அடைக்கப்பட்டிருக்கும். சந்திரகிரகணம், வரும் பத்தாம் தேதி நிகழ உள்ளது. கிரகண நேரத்தில் கோவில்கள் நடை அடைக்கப்பட்டு, அதன் பின்னர் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, மீண்டும் நடை திறக்கப்படும். அதன்படி பத்தாம் தேதி நிகழ உள்ள சந்திரகிரணத்தையொட்டி, சபரிமலையில் மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை, நடை அடைக்கப்பட்டிருக்கும். அன்று மாலை மூன்று மணிக்கு திறக்கும் நடை, மாலை 6.15 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின்னர் இரவு 8.15 மணிக்கு திறக்கப்படும். பரிகார பூஜைகள் முடிந்த பின்னர் தீபாராதனை மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்று ஒரு நாள் மட்டும் புஷ்பாபிஷேகம் இருக்காது.