ஒன்பது பேர் வழிபட்ட முருகன்!
ADDED :3013 days ago
காரைக்குடிக்கு மேற்கே 11 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. இங்குள்ள குமரன் கோயில் மயில் போன்ற தோற்றமுள்ளதாகக் காட்சி தருகிறது. 144 படிகள் ஏறிச் சென்றால் மலைக்கோயில் மலைக் குகையில் ஆறடி உயர முருகன் தரிசனம். மயில் மீது முருகப்பெருமானின் அமர்ந்த கோலம். இருபுறமும் வள்ளி தெய்வானை தனித்தனியாக மயில் மீது அமர்ந்துள்ளனர். திருமால், நான்முகன், இந்திரன், சூரியன், காமன், கருடன், வசிஷ்டர், நாரதர், பஞ்ச பாண்டவர் ஆகியோர் இங்கே முருகனை வழிபட்டிருக்கிறார்கள். முருகன் வேலெறிந்து உருவாக்கிய சரவணப் பொய்கையும் இத்தலப் பெருமையை மேன்மைப்படுத்துகிறது!