விக்ரகம் ஏன்?
ADDED :3012 days ago
சூரியன் முன்பு சிறிது பஞ்சைக் காட்டினால், பஞ்சில் தீப்பிடிப்பதில்லை. சூரியனுக்கும் பஞ்சுக்கும் இடையில் ஒரு சூரிய காந்தக் கண்ணாடியைக் காட்டினால் அது சூரிய கிரணத்தை அதிகமாக இழுத்து வெகுசீக்கிரமாகப் பஞ்சில் தீப்பற்றியெரியும்படி செய்கிறது. அதுபோல, பஞ்சாகிய நமது உள்ளத்தில் இறைவனது அருளாகிய தீ வெகுதுரிதமாகப் பற்றுவதற்குக் கண்ணாடியாகிய விக்கிரகம் மிக உதவுகின்றது. பசுவின் உடலெங்கும் வியாபித்திருக்கும் பால், அதன் மடி வழியாகச் சுரப்பதுபோல, பரந்து கிடக்கும் ஆண்டவனது அருள், விக்கிரக வழியாக நமக்குக் கிடைக்கின்றது. கடவுள் பாலில் நெய்போல் எங்கும் வியாபித்திருப்பினும், விக்கிரகங்களில் தயரில் நெய்போல் விளங்குகின்றார்.