படவேட்டம்மன் ஆடி விழா நிறைவு
ADDED :2988 days ago
காஞ்சிபுரம்: படவேட்டம்மன், சுந்தரி அம்மன், 63ம் ஆண்டு ஆடி திருவிழா, நேற்று நிறைவு பெற்றது.சின்ன காஞ்சிபுரம், சேஷாத்ரிபாளையம் தெருவில், படவேட்டம்மன், சுந்தரி அம்மனுக்கு, ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி, 63ம் ஆண்டு ஆடி திருவிழா நடந்தது.நிறைவு நாளான, நேற்று காலை, படவேட்டம்மன், சுந்தரி அம்மன், புஷ்ப அலங்காரத்தில், நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். இதற்கான ஏற்பாடு களை, சேஷாத்திரிபாளையம் வட்டத்தைச் சேர்ந்த விழா குழுவினர் செய்திருந்தனர்.