உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் மடத்தில் அருட்பாமாலை

வள்ளலார் மடத்தில் அருட்பாமாலை

ஆர்.கே.பேட்டை:பவுர்ணமியை ஒட்டி, அத்திமாஞ்சேரிபேட்டை வள்ளலார் மடத்தில், நேற்று, சிறப்பு வழிபாடு நடந்தது. திருவருட்பாமாலை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஜோதி தரிசனம் செய்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது வள்ளலார் மடம். தைப்பூசம் உள்ளிட்ட ஆண்டின் அனைத்து பவுர்ணமி திதியிலும் இங்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வள்ளலார் ஜோதி தரிசனத்தின் போது, திருவருட்பாமாலை ஓதப்படுகிறது. ஆவணி மாதபவுர்ணமியான நேற்று, பகல் 12:00 மணிக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பாமாலை நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து, ஜோதி தரிசனம் நடந்தது. இதே போல், பொதட்டூர்பேட்டை மற்றும் சோளிங்கர் அடுத்த, பத்மாபுரம் வள்ளலார் மடங்களிலும், நேற்று, பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !