சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 9ம் ஆண்டு திருபவித்ர உற்சவம்
ADDED :2988 days ago
சேலம்: சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ராஜ அலங்காரத்தில் பெரிய கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், வீதி உலா வந்தார். சேலம், சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம், கடந்த, 31ல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, அங்குரார்பணத்துடன் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடந்த உற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, சவுந்திரராஜர், சவுந்திரவல்லி, ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்பட, மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிகளுக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து, புதிய பவித்ர மாலை சார்த்தப்பட்டது. நேற்று, உதயகால கருடசேவை நடந்தது. அதற்காக, அதிகாலை, 5:00 மணிக்கு, பெரிய கருட வாகனத்தில், உற்சவர் சவுந்திரராஜர், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.