வல்லம் வாமனர் கோவிலில் ஒணம் கொண்டாட்டம்
ADDED :2988 days ago
செங்கல்பட்டு: வல்லம் கிராமத்தில், திருவிக்கிரமர் என்ற வாமனர் கோவிலில், ஓணம் பண்டிகை விழா, நடந்தது. செங்கல்பட்டு வல்லம் நேரு நகரில், திருவிக்கிரமர் என்ற வாமனர் கோவில் உள்ளது. ஒணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டதை அடுத்து, திருவிக்கிரமர் என்ற வாமனருக்கு, சிறப்பு அபிஷேகம், நடந்தது. விழாவில், பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.