வல்லம் சடையீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3068 days ago
வல்லம்: சடையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லம் கிராமத்தில், சைனாம்பிகை அம்மன் உடனுறை சடையீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், அண்மையில் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, 1ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.