ஆவணி மூலத்திருவிழாவில் பங்கேற்று குன்றம் திரும்பினார் முருகன்
ADDED :3056 days ago
திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்பதற்காக செப்.,1ல் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானையும் புறப்பாடாகினர். திருவிழா முடிந்து, செப்.,5ல் மதுரை சுவாமிகளிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை நெல்பேட்டை பகுதி மண்டபத்தில் அபிஷேகம், பூஜை முடிந்து பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைந்தனர்.