வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு சேர்வராயன் கோயில் பகுதியில் ஐஸ்வர்ய காளியம்மன் கோயில் உள்ளது. பழுதடைந்து இருந்த அக்கோயிலை அப்பகுதி மக்கள் நன்கொடை வசூல் செய்து புதிதாக கட்டினர். அத்துடன் விநாயகர் , காலபைரவர் சன்னதியும் கட்டப்பட்டது. கடந்த ஓராண்டாக நடந்து வந்த அப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. வாஸ்து சாந்தி, கோபூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளில் விக்னேஸ்வர பூஜை , பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்பநீரை சிவாச்சார்யார்கள் கோயிலை சுற்றி கொண்டு வந்து மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்தனர். அபிஷேகநீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. ஐஸ்வர்ய காளியம்மனுக்கும், விநாயகருக்கும், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பைரவருக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானமும் நடந்தது.