உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யஜுர் வேதிகளுக்கான ஆவணி அவிட்டம் அனுசரிப்பு

யஜுர் வேதிகளுக்கான ஆவணி அவிட்டம் அனுசரிப்பு

யஜுர் வேதிகள், ஹேவிளம்பி ஆண்டிற்கான ஆவணி அவிட்டத்தை, நேற்று அனுசரித்தனர். ஆவணி அவிட்டம் என்பது, உபநயனம் செய்து கொண்டவர்கள், ஆண்டுதோறும், ஆடி அல்லது ஆவணி மாதங்களில், அவிட்ட நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடு. அன்று, ரிக், யஜுர் வேதிகள், பூணுல் மாற்றும் சடங்கை அனுசரிப்பர். சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி தினத்தில், அனுசரிப்பர். ஹேவிளம்பியான இந்த ஆண்டு ஆவணி அவிட்டம், சந்திரகிரஹணத் தன்று வருவதால், அன்று, ஆவணி அவிட்டம் அனுசரிப்பது குறித்த பல்வேறு கருத்துகள் எழுந்தன. இந்நிலையில், ஆவணி அவிட்டத்தை வைணவர்கள் தனியாகவும், மற்றவர்கள் தனியாகவும் அனுசரிக்க முடிவு செய்தனர். அதன்படி, வைணவர்கள், ஆக., 7ல் அனுசரித்தனர்; யஜுர் வேதிகள் ஆவணி அவிட்டத்தை நேற்று அனுசரித்தனர். அதே நேரம், நேற்று மகாளய பட்சம் துவக்கம் என்பதால், ஆவணி அவிட்டம் முடித்து, பின், தர்ப்பணம் செய்தனர்.  - நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !