மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
2924 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
2924 days ago
விருதுநகர் : 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை மற்றும் பாறை ஓவியங்கள் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மீனாட்சிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சிபுரத்தில் உள்ள குன்றுகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த சிறிய குகைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள மூன்று குகைகளில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. இதில், வேட்டைக் காட்சிகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனிதர்கள் புலியை சுற்றி வளைத்து தாக்குவது, ஒரு விலங்கை சுற்றி வளைத்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆரவாரம் செய்வது, கையில் ஆயுதங்களுடன் நிற்கும் மனிதன், கதிரவன் காட்சி, வேட்டையாடிய விலங்கை கையில் பிடித்து வரும் மனிதன், யானை உருவம், கருவுற்ற விலங்குகளின் உருவம், அந்த கூட்டத்தின் தலைவன் உருவம் என பல வகை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த குகை ஓவியங்கள் குறித்து மாங்குடி மலைக்கனி, நெல்லை தமிழாசிரியர் சங்கரநாராயணன் ஆய்வில் தெரியவந்துள்ளது.இதுகுறித்து சங்கரநாராயணன் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 55 முதல் 60 பாறை ஓவியம் கிடைத்துள்ளது. உலகளவில் பாறை ஓவியங்கள் பச்சை, சிவப்பு, வெள்ளை, கருப்பு என நான்கு நிறமாக பிரிக்கப்படுகிறது. மீனாட்சிபுரத்தில் கிடைத்தது வெள்ளை நிற பாறை ஓவியம். மூன்று குகைகளில், ஒரு குகை முழுவதும் ஓவியமாக உள்ளது. இதில், சூரியன் உட்பட பல ஓவியங்கள் அழகாக உள்ளன. மற்ற ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். பாறை ஓவியம் மற்றும் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குகை அடங்கிய இந்த குன்றை தொன்மரபு சின்னமாக தொல்லியல் துறை அறிவித்து பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் பல அரிய தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
2924 days ago
2924 days ago