ஆனூர் முதுமக்கள் தாழி காப்பாற்றப்படுமா?
ADDED :2964 days ago
திருக்கழுக்குன்றம்: தொன்மையான ஆனுார் முதுமக்கள் தாழிகளை பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுாரில், பழமையான அஸ்திரபுரிஸ்வரர் கோவில், வேதநாராயண பெருமாள் கோவில், முருகர் கோவில்கள் உள்ளன. இவற்றுடன் மிக பழமையான, 2,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக கூறப்படும், முதுமக்கள் தாழிகளும் உள்ளன. இந்த இடத்தையும், தாழிகளையும் தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர். எனினும், தடுப்பு வேலிகள், காவலர்கள் இல்லை. இதனால், தாழிகள் இருக்கும் இடம் வரை, பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. மேலும், இங்குள்ள முதுமக்கள் தாழி சிறப்புகளை, பொதுமக்கள் அறியும் வகையில், விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரி உள்ளனர்.