ஸ்ரீபெரும்புதூரில் ஷீரடி சாய்பாபா திருவுருவ சிலை பிரதிஷ்டை
ADDED :2965 days ago
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மடுவன்கரை, கோகுல்தாம் வளாகத்தில், க்ஷேத்ரா டிரஸ்ட் சார்பில் ஷீரடி சாய்பாபா கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் செப் 5ம் தேதி காலை 10.45 மணிக்கு, ஷீரடி சாய்பாபா திருவுருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.