நடராஜர் கோயிலில் கணபதி ேஹாமம்
ADDED :3012 days ago
தேவிபட்டினம், தேவிபட்டினம் அருகே அழகன்குளம் சிவகாமி அம்பாள் சமேத நடராஜ் கோயில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை மற்றும் கணபதி ேஹாமம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தனபூஜை, விமான கலச பூஜை, நவகிரக ேஹாமம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து இரவில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை (செப்.8) காலை 9 :00 மணிக்கு கோயில் கும்பாபிேஷகம் நடைபெறுவதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.