சங்கர மடத்தில் ஆவணி அவிட்டம்
ADDED :2964 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் நேற்று, பூணுால் அணிதல் நிகழ்ச்சி நடந்தது. ஆவணி அவிட்டத்தை யொட்டி, விழுப்புரம் சங்கரமடத்தில் காலை 9:30 மணிக்கு பூணுால் அணிதல் நிகழ்ச்சி நடந்தது. யாகம் வளர்த்து, விநாயகர், கலச பூஜைகள் செய்ததை தொடர்ந்து, பிராமணர்கள், பூணுால் மாற்றி அணிந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சங்கரமட ஆசிரியர் சீனுவாச சர்மா செய்திருந்தார். இதே போல், விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில், வாணிய செட்டியார் சமூகத்தினரும், திரு.வி.க., வீதியில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபையில் செட்டியார், பக்தர் சமூகத்தினரும், பூணுால் மாற்றி அணிந்தனர்.