ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் மாற்றும் வைபவம்
ADDED :2964 days ago
புதுச்சேரி: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பிராமணர்கள் புதிய பூணுால் அணிந்தனர். புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், யஜூர் வேத உபாகர்ம ஆவணி அவிட்டம் வைபவம் நேற்று காலை 11:00 மணியளவில், விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, மகா சங்கல்பம், காந்தரிஷி தர்ப்பணம், ஹோமம், வேதாரம்பம் நடந்தது. கீதாராம சாஸ்திரிகள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கான பிராமண சமூகத்தினர் பங்கேற்று, புதிய பூணுால் அணிந்தனர்.