சேதுக்கரையில் ரூ.54 லட்சத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்
ADDED :2964 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரையில் 54 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் துவங்கியுள்ளன. பல ஆன்மிக புண்ணிய தலங்களை பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில், சேதுக்கரை கடற்கரை பாவங்களை போக்கும் தலமாக இருக்கிறது. இங்கு திதி, தர்ப்பணம், சங்கல்ப பூஜைகள் செய்யப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் இருந்து பயணிகள் வருகின்றனர். இவர்களின், வசதிக்காக சேதுக்கரை கடலில் நீராட வசதியாக படித்துறை, உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதிகள், சுற்றுலா குடில் வசதிகள் செய்யப்படுகிறது. இதற்காக, சுற்றுலாத்துறை சார்பில் 54 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளதாக, மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன் தெரிவித்தார்.